Sunday, August 22, 2010

ஆயுட்கால தத்துவம்

Wednesday, August 18, 2010

மீன் குழம்பு(மூணு பேருக்கு ரெண்டு வேலைக்கு) பேச்சிலர் சமையல்:


தேவையான பொருட்கள்:


1.       சாப்பிடுவதற்கு ஆள் வேணும்
2.       நன்றாக கழுவிய மீன்
3.       மாங்காய் (உங்கள் இஷ்டம்)
4.       எண்ணெய் தேவையான அளவு. ஜோதிகாவுக்கு மட்டும் சட்டியளவு.
5.       புளி – ஆரஞ்சு பழ சைஸ்கு
6.       தேங்காய் துருவியது அல்லது தேங்காய் பவுடர் ஒரு காங்கிரஸ் கை அளவு
7.       ஒரு பெரிய வெங்காயம் பெரியது
8.       வெந்தயம்
9.       சீரகம்
10.   தக்காளி ரெண்டு சிறியது
11.   மிளகாய் – 4
12.   மிளகாய் தூள்
13.   மல்லி தூள்
14.   மஞ்சள் தூள்
15.   உப்பு தேவையான அளவு
16.   ஒரு அடுப்பு
17.   ஒரு காஸ் சிலிண்டர்
18.   ஒரு தீப்பெட்டி அல்லது ஒரு லைட்டர்
19.   மிக்ஸி ( Sanyo கம்பெனி ஓகே)
20.   ஒரு சட்டி
21.   ஒரு கரண்டி
22.   சிறிது தண்ணீர்
23.   மிக்ஸி ஓடுவதற்கு மின்சாரம்
24.   ஒரு குப்பைத்தொட்டி(வேஸ்ட்களை போட)
25.   மேலே சொன்ன அனைத்து பொருட்களும் வாங்க பணம் வேண்டும்.

செய்வதற்கு முன் செய்ய வேண்டியவை:

1.       கையை சுத்தமாக கழுவி கொள்ளவும்.
2.       ஆரஞ்சு பழம் சைஸ்சில் உள்ள புளியை சிறிதளவு தண்ணியில் ஊற வைக்கவும்.
3.       ஊறவைத்த பின் புளியை கரைத்து சக்கையை பிழிந்து சக்கையையும் கொட்டையையும் குப்பைத்தொட்டியில் போடவும்.
4.       வெந்தயத்தையும் சீரகத்தையும் கரண்டியில் இட்டு அடுப்பில் சிம்மில் காட்டி வறுக்க வேண்டும்(கண்டிப்பாக கருக விடக்கூடாது).
5.       துருவிய தேங்காயையும் அல்லது தேங்காய் பவுடரையும் பாதியை மெலிசாக அறுத்த பெரிய வெங்காயத்தையும் வறுத்த வெந்தய சீரகத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
6.       சக்கை பிழிந்த புளித்தண்ணீரில் தேவையான அளவு உப்பையும் 1 ½ ஸ்பூன் மிளகாய் தூளையும் 1 ½ ஸ்பூன் மல்லி தூளையும் போடவும்.
7.       மிக்ஸியில் அரைத்ததை எடுத்து மேலே சொன்ன புளிக்கலவை தண்ணியில் போடவும்.
8.       மீதி பாதி பெரிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் மெலிசாக அறுத்து வைக்கவும்.
9.       தக்காளியையும் மாங்காயையும் அறுத்து வைக்கவும்.

செய்முறை:

1.       அடுப்பை சிம்மில் வைத்து சட்டியை அடுப்பில் வைக்கவும்
2.       தேவையான அளவு எண்ணையை ஊற்றவும்
3.       சிறிதளவு வெந்தய சீரகத்தை சட்டியில் உள்ள எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
4.       வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
5.       பின்பு தக்காளியை போட்டு வதக்கிய பின் சிறிதளவு மிளகாய் தூளை போட்டு வதக்கவும்.
6.       புளியுடன் சேர்த்து கரைத்து வைத்ததை சட்டியில் ஊற்றவும்.
7.       1 ½ கிளாஸ் தண்ணியை ஊற்றவும்.
8.       உப்பு புளிப்பு உறைப்பு சரியாக உள்ளதா என்று கண்டிப்பாக மிகவும் கண்டிப்பாக சாம்பிள் பார்க்கவும்.
9.       நன்றாக கொதி வந்த பிறகு மீனையும் மாங்காயையும் போடவும்.
10.   மூடியை போட்டு அடுப்பை சிம்மிலேயே வைத்து விட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து மீனும் மாங்காயும் வெந்து விட்டதா என்று பார்க்க வேண்டும்.
11.   வெந்து விட்டது என்றால் அடுப்பை OFF  செய்யவும் இல்லாட்டி வேகும் வரை வேக விடவும்.
12.   பின்பு அடுப்பை OFF  செய்யவும்.

பின்குறிப்பு:

1.       முள்ளு பார்த்து மீன் சாப்பிடவும்.
2.       இதை படித்தவுடன் அல்லது இந்த குழம்பை சமைத்தவுடன் கண்டிப்பாக பின்னூட்டம் இடவும்.
3.       நாம சமைச்சுட்டோம்னு மெதப்பா இருந்தாலும் என்றைக்கும் அன்பும் பாசமும் நிறைந்த அம்மா மற்றும் மனைவியின் மீன் குழம்பு போல் வராது.

Tuesday, August 17, 2010

கஷ்டம்

நான் கஷ்டதில் இருக்கும் போது கூட கேக்காமல் உதவியும்,ஆறுதளுமாய் இருந்த நண்பர்களும் மற்றும் உறவினர்களும் ப்ளாக் ஆரம்பித்த பின்னால் ஒரு தடவை கூட என் ப்ளாக்ஐ பார்க்காமல் இருப்பதை கண்டு மணம் வேதும்பிகிறது....

கைபேசில் தொடர்பு கொண்டாலும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

பி.கு: இதை ப்ளோக்குக்கு வந்த சோதனையாக நிர்வாகம் காணுகிறது.(ஏப்புடிடிடிடிடிடிடிடி)

chinnapaiyan special1


கெட்டவங்களுக்கு கடவுள் நிறைய கேர்ள்பிரண்ட்ஸ் கொடுப்பான் ஆனா மொக்கை ஒய்ப் கொடுத்து கை விட்டுவா
ன்

ஆனா நல்லவங்களை ஒரு கேர்ள் பிரண்டும் கொடுக்காம கடவுள் சோதிப்பான் ஆன அன்பான மனைவியையும்,அழகான மச்சினிச்சியும் கொடுத்து கைவிட மாட்டான்