Sunday, June 12, 2011

சொந்த வீடு


மச்சான், என்னால ஒரு சொந்த வீடு வாங்க கூடமுடியாதாடானு நண்பனிடம் கேட்கும் போது அழுகையே வந்துருச்சு. அப்புரம் என்னங்க வெறும் 50ரூபாய்க்கு விற்றயிடம் இப்போ சதுர அடி 950ரூபாய்க்கு விக்கிறாங்க. இதுல புரோக்கர் கண்ணன் தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக என்னை, வீடு வாங்க வைப்பதேயே நினைச்சுகிட்டு இருக்கான். எனக்காகவேண்டி ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் வேற தொடங்கிட்டாரு..

உங்களுக்கு ஒரு கோடி டாலர் லாட்டரியில் விழுந்திருக்கிறதுனு வரும் இமெயில் கிடையில்,அண்ணே நம்ம முத்து மாமனாரோட வீட்டை குடுக்குறதா சொல்லுராரு நீங்கனு சொன்ன கொரச்சு தருவாரு.என்ன பேசிடலாமா.”Yours faithfully”கண்ணன்னு ஒரு வாரத்துல ரெண்டு,மூனு இமெயில் வந்துரும். இதுல அம்மாவுக்கும் மனைவிக்கும் ,Ccய வேற வச்சுருவான்.அப்பரம் அவங்க ஃபலோவப் வேற.என்னப்பா என்ன முடிவு பண்ணிருக்க.
என்னமோ நான் ஸ்பெக்டரம் பணத்த கையில வச்சுக்கிட்டு என்ன பண்ணுறதுனு முளிச்சிக்கிட்டு இருக்குற மாதிரி இவங்களுக்கு நினைப்பு.

சரி இந்த அன்பு தொல்லைக்கு அடிபனிந்து ஒரு வீடு வாங்களாமுனு இறங்கினால் வீட்டோட புரோக்கர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.ஒரு ஊருல இருக்கிற அத்தனை பெரும் புரோக்கர்கள்.இதுல எனக்கு தெறிஞ்சவன் என் கண்ணன்.

கண்ணன் ஒரு வீடு இருக்கு சார் புதன்கிழமை இந்த டீ கடைக்கு வந்துருங்க போய் பாத்திடலாமுனு எனக்கு அப்பாயிண்மெண்ட் குடுத்தான்.

சொன்னது போல புதன்கிழமை டீக்கடையில் இருந்து பயணத்தை ரெண்டு டீ,9,10 பலக்காரத்துடன் இனிதே ஆரம்பம் செய்தோம்  ஒரு பெரியவரை வழியில் பார்த்து என்ன பெருசு வீடு வேள பாதிலேய நிக்குது என்ன விசயம் என்று இந்த வீ.ஓ குசலம் விசாரிப்புவேறு. பாவம் அவர் வெள்ளேந்தியாக பணக்கஷ்டத்தை இவனிடம் சொல்ல அதற்கு இவன் தனக்கு தெறிஞ்ச ஒருதர் நல்ல விலைக்கு வாங்கிக்கொள்வார் ஓகேவானு கேக்க அந்த பெரியவர் போங்கட திருட்டு பயள்களா என்று பன்னைமையில் என்னையும் திட்டித்தீர்த்து விட்டார். கடைசி வரை ஒரு வீடும் அமையவேயில்லை.

ஆரம்பித்த அதே டீ கடையில் எங்கள் பயணம் முடிவடைய, கடைசி டீ பாக்கியிருந்ததுனால் டீ குடிக்க மறுபடியும் அங்கே சென்றோம்.அப்பதான் அந்த ஆளைப் பார்த்தேன்.எங்கோ பரிச்சயம் ஆனா முகம், ஆனால் எங்கே என்று நியாபகத்துற்கு வரவில்லை.வலிய போய் அவரிடம் பேசும் போது தான் நியாபகத்திற்கு வந்தது. பின்பு அவரிடம் என் வீடு தேடும் படலத்தை சொன்னவுடன் தனக்கு தெறிந்த இடத்தில் ஒரு வீடு இருக்கு என்று என்னை அழைத்து சென்றார்.

சதுர அடி 950ரூபாய்க்கு விற்கும் இடத்தில் 500ரூபாய்க்கு ஆறு அடி இடம் கிடைப்பது அதிசயம் தான்.அந்த வீட்டுப் பக்கத்தில் என் பெரியப்பாவின் வீடும்,என் இரண்டு அண்ணன்களின் வீடும் இருப்பது மேலும் அந்த இடத்திற்கு சிறப்பு.

நிரந்தரமான வீடு பாத்துட்டேனு எப்படி அம்மாவிடமோ,மனைவியிடமோ, சொல்லுவது.


No comments:

Post a Comment